அருளியவர்: ஆண்டாள்
திவ்ய தேசம்:
திருத்வாரகை (துவாரகா)
,  திருமாலிருஞ்சோலை (அழகர் மலை)
பாசுர எண்: 594
நாச்சியார் திருமொழி
: 9
காலை யெழுந்திருந்து கரிய குரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலை மலைப்பெருமான் துவ ராபதி யெம்பெருமான்*
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே.
(நாச்சியார் திருமொழி - 9.8)
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலைமலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே.
(நாச்சியார் திருமொழி - 9.8)
kaalai ezhundhirundhu kariya kuruvi kaNangaL
maalin varavu solli maRuL paadudhal meymmai kolO?
SOlaimalaip perumaan thuvaraapadhi emperumaan
aalinilai perumaan avan vaarththai uraikkindradhe.
(Naachiyaar Thirumozhi - 9.8)
Flocks of blackbirds spoke as I woke up this morning, about the Lord of mountain groves, about the King of Dvaraka, about the Lord who slept on a fig leaf in the deluge. Their sweet Marul tune seems to foretell His coming, could it be true?
கரிய குருவிக் கூட்டங்கள் விடியற்காலை எழுந்திருந்து அழகாகப் பாடுகின்றன. திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருக்கும் அழகரையும், துவாரகைத் தலைவனையும், பிரளய காலத்தில் ஆல் இலையில் தவழ்ந்த பெருமானையும் பற்றி, 'மருள்' என்னும் பண் கொண்டு பாடுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இன்று என் மனத்துக்கினிய அழகர் பெருமான் என்னை ஆட்கொள்ள இங்கு வரவிருப்பதை முன்கூட்டியே அறிவிப்பது போல் உள்ளதே.
மால் - அன்பு; அன்புடையவன்; மயக்கம்; மயக்கம் தருபவன்; திருமால்
மருள் - ஒரு பண் வகை
சோலைமலை - திருமாலிருஞ்சோலை மலை
மெய்ம்மை கொலோ ? - உண்மை தானோ?
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.