Blogs

STD Pathasala Newsletter(106)

பாடசாலை செய்தி பத்திரிக்கை (75)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிக்கை - ஜனவரி 2014.

12-1-2014 முதல் 22-1-2014 வரை நடைபெற உள்ள தேவகான உற்சவ நிகழ்ச்சி நிரலை உள்ளே காண்க.

அனைவரும் வருகை தருவீர். திருநாரணன் அருளைப் பெறுவீர்.

நமோ நாராயண !

கண்ணனே ! களைகண் நீயே !(74)


தாவளந் துலகமுற்றும்
தடமலர்ப் பொய்கை புக்கு*
நாவளம் நவின்றங் கேத்த
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மாவளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே ! களைகண் நீயே.
(பெரிய திருமொழி - 4.6.1)

பாடசாலை செய்தி பத்திரிக்கை - அக்டோபர் 2013(73)

ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, அக்டோபர் 2013

(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )

திருத்தேவனார் தொகை(72)

போதலர்ந்த பொழில் சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன் தான் உறையுமிடம் - வயல் நாங்கை வரிவண்டு
தேதென என்று இசைபாடும் திருத்தேவனார் தொகையே.
(பெரிய திருமொழி - 4.1.1)

கூரேசர் தாலாட்டு(71)

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் !

பரிமுகமாய் அருளிய எம் பரமன்(70)

முன் இவ்வுலகு ஏழும் இருள் மண்டியுண்ண
முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின்,
செந்நெல் மலிகதிர்க் கவரி வீசச் சங்கம் அவை முரலச்
செங்கமல மலரை ஏறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.

(பெரிய திருமொழி - 7.8.2)

பாசுரங்கள் - வாமன அவதாரம், அனந்தபுரம், திருவோணம்(69)

உடுத்துக் கலைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம்திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
(திருப்பல்லாண்டு - 9)
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக் கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே, தாலேலோ ! வையம் அளந்தானே, தாலேலோ !

(பெரியாழ்வார் திருமொழி - 1.3.1)

மாயா ! வாமனனே ! மதுசூதா ! நீ அருளாய் !
தீயாய், நீராய், நிலனாய், விசும்பாய், காலாய்
தாயாய், தந்தையாய், மக்களாய், மற்றுமாய், முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி - 7.8.1)

கெடுமிடர் ஆயவெல்லாம் கேசவா என்றிட நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் சூழ் அனந்தபுரம் புகுதும் இன்றே !

(நம்மாழ்வார் திருவாய்மொழி - 10.2.1)

மரங்களும் இரங்கும் - தொலைவில்லிமங்கலம் பாசுரங்கள்(68)

(ராகம்; கர்நாடக தேவகாந்தாரி)
துவள் இல் மாமணி மாடம் ஓங்கு
தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் ! உமக்கு
ஆசை இல்லை; விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
நின்று நின்று குமுறுமே.
(திருவாய்மொழி - 6.5.1)
குமுறும் ஓசை விழவு ஒலித்
தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்; மற்று இவள்
தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
நெக்கு ஒசிந்து கரையுமே.
(திருவாய்மொழி - 6.5.2)
இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள்
கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
மணிவண்ணாவோ என்று கூவுமால்;
துரங்கம் வாய் பிளந்தான் உறை
தொலைவில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
திருநாமம் கற்றது என் பின்னையே.
(திருவாய்மொழி - 6.5.9)
நம்மாழ்வார் திருவடிகளே சரணம் !

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே(67)

பெரும்புறக் கடலை அடல் ஏற்றினைப்
பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப்
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
அரும்பினை அலரை அடியேன் மனத்து
ஆசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினை கனியைச் சென்று நாடிக்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.
(பெரிய திருமொழி - 7.10.1)

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.