அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கூடல் (மதுரை)
பாசுர எண்: 2
திருப்பல்லாண்டு
*அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறை யும்சுட
ராழியும் பல்லாண்டு !
படைப்போர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.
(திருப்பல்லாண்டு - 2)
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு !
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு !
வடிவார் சோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு !
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.
(திருப்பல்லாண்டு - 2)
adiyomOdum ninnOdum pirivinri
aayiram pallaandu
vadivaay nin vala maarbinil vaazhginra
mangaiyum pallaandu;
vadivaar chOthi valathuRaiyum sudar
aazhiyum pallaandu;
padaipOr pukku muzhangum appaanja
channiyamum pallaandE.
To the bond between us, many and many a thousand years. To the dainty lady resting on your manly chest, many and many thousand years. To the fiery orb discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.
(நாராயணா! கிருஷ்ணா !) நீயும் உன் பக்தர்களும் என்றும் கூடியே (பல்லாண்டு) வாழ்க ! உனது வலது மார்பினில் அழகாய் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி பிராட்டி ஒரு குறைவும் இல்லாமல் என்றும் வாழ்க ! உனது வலது திருக்கரத்தில் அழகிய வடிவுடன் சுடர் விட்டு பிரகாசிக்கும் சக்கராயுதம் என்றும் வாழ்க ! போர்க்களத்தில் பேரொலி முழக்கத்தினாலேயே எதிரிகளுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தும் அந்தப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு வாழ்க !
வடிவாய் - அழகாக
மங்கை - லக்ஷ்மி பிராட்டி
புக்கு - புகுந்து
ஆழி - சக்கரம்
ஆர் - கூர்மை; அழகு; மிகுதி
வடிவார் சோதி - வடிவு + ஆர் + சோதி
வடிவார் சோதி - அழகான ஒளி ரூபம்
சுடராழி - ஒளி வீசும் சக்கராயுதம்
பாஞ்சசன்னியம் - பகவான் கிருஷ்ணனின் வெண்சங்கு
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.