அருளியவர்: மதுரகவி ஆழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 1)

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்

பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்,

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்,

அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் *
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே *
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி *
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 2)

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை*
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்*
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 3)

நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே.

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் கூருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 5)

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புகழ் ஏத்த அருளினான்;
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 6)

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 7)

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 8)

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட்

புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 9)

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 10)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.