அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணங்குடி

பாசுர எண்: 1748
பெரிய திருமொழி : 1

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய
வாளர வின்அணை மேவி*
சங்கமார் அங்கைத் தடமலர் உந்திச்
சாமமா மேனியென் தலைவன்*
அங்கமா றைந்து வேள்விநால் வேதம்
அருங்கலை பயின்று* எரிமூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
(பெரிய திருமொழி - 9.1.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திரு ஆதனூர்

பாசுர எண்: 0
பெரிய திருமடல் : 10

என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர் தம் முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை நென்னலை யின்றினை நாளையை, நீர்மலைமேல்

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும் முண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்* உலக மேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே !

நீரகத்தாய் நெடுவரை யினுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத் தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் ஒண்துறைநீர் வெஃகா வுள்ளாய் ! உள்ளுவார் உள்ளத்தாய் !* உலக மேத்தும் காரகத்தாய் ! கார்வானத் துள்ளாய் ! கள்வா ! காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் !* பேராதென் நெஞ்சி னுள்ளாய் ! பெருமான் ! உன் திருவடியே பேணி ணேனே.

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும் அருள் நடந்து*இவ் வேழுலகத் தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்தவிடம்* பெரும்புகழ்வே தியர்வாழ் தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங் கழுநீர் தாமரைகள் தடங்கடொறும் இடங்கடொறும் திகழ* அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே !

திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை செழுங்கடல் அமுதினிற் பிறந்த அவளும்*நின் னாகத் திருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசைவி டாளால் குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லுநின் தாள்நயந் திருந்த இவளை*உன் மனத்தா லென்நினைந் திருந்தாய்? இடவெந்தை யெந்தை பிரானே.

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்

படுகடலில் அமுதத்தைப் பரிவாய்கீண்ட

சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்

சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்

புணர்மருதம் இறநடந்த பொற்குன்றினை*

காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

பார் ஆயது  உண்டு உமிழ்ந்த பவளத்தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய்  கீண்ட  
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை 
போர்  யானைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினைப்
புணர்  மருதம் இற நடந்த பொற்குன்றினை* 
கார்  யானை இடர் கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருவல்லிக்கேணி

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 3

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்தன் தேர்முன் நின்றானை* சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோ ராளரியாய்* அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்* பைங்கண் ஆனைக்கொம்புகொண்டு பத்திமையால்* அடிக்கீழ்ச் செங்கண் ஆளி யிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருநைமிசாரண்யம்

பாசுர எண்: 998
பெரிய திருமொழி : 6

வாள் நிலா முறுவல், சிறு நுதல், பெருந்தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்; எண்ணினேன்; எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.