கண்டு கொண்டு என்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 7)

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 8)

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட்

புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 9)

பயன் அன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 10)

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.

(கண்ணிநுண் சிறுத்தாம்பு - 11)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3184
முதல் திருவந்தாதி

வையம் தகளியா வார் கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக -- செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி - 1)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3185
முதல் திருவந்தாதி

என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீர் ஏற்றது?
ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று அது
அடைத்து, உடைத்து, கண்படுத்த ஆழி; இது நீ
படைத்து, இடந்து, உண்டு உமிழ்ந்த பார்.
(முதல் திருவந்தாதி - 2)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3186
முதல் திருவந்தாதி

பார் அளவும் ஓர் அடி வைத்து, ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே; சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான்; அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி.
(முதல் திருவந்தாதி - 3)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3187
முதல் திருவந்தாதி

நெறி வாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறி வாசல் போர் கதவம் சாத்தி, அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரண்.
(முதல் திருவந்தாதி - 4)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3188
முதல் திருவந்தாதி

அரண் நாரணன் -- நாமம்; ஆன்விடை புள் -- ஊர்தி
உரை -- நூல் மறை; உறையும் கோயில் -- வரை, நீர்;
கருமம் -- அழிப்பு அளிப்பு; கையது -- வேல், நேமி;
உருவம் -- எரி, கார்மேனி, ஒன்று.
(முதல் திருவந்தாதி - 5)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.