​திருப்பல்லாண்டு - 7

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 7
திருப்பல்லாண்டு : 1

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்* கோயிற்

பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி யாட்செய்கின்றோம்* மாயப்

பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி பாயச்

சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

(திருப்பல்லாண்டு - 7)

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்*

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*

மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழிகுருதி

பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

(திருப்பல்லாண்டு - 7)

theeyir poligindra senchudaraazhi thigazh thiruch chakkaraththin*

kooyiR poRiyaale otRundu ninRu kudi kudi aatcheyginrOm

maaya porupadai vaaNanai aayiram thOlum pozhi kurudhi

paaya suzhatriya aazhi vallaanukku pallaandu koorudhume.

(thiruppallaandu - 7)

To the Lord who wielded His discus on the wicked Banasura who was waging an unfair battle through his illusory powers, we sing Pallandu.

[பொருள்]

திருமாலின் திருச்சக்கரம் தீயைக் காட்டிலும் பிரகாசமாக விளங்கும் ஒரு வட்ட வடிவ சோதியால் சூழப்பட்டதாய் உள்ளது. இந்த திருச்சக்கர சின்னத்தை திருமால் ஆலயங்களில் 'பகவானிடம் சரணாகதி செய்துவிட்டேன். இனி நான் உன் உடைமை.' என்று சொல்லி அதன் அடையாளமாக சரணாகதர்கள் தங்கள் தோள்களில் பொறித்துக் கொள்வர். அவ்வாறு பிறவி தோறும் பிறவி தோறும் அவனுக்கே ஆட்பட்டு அடிமை செய்யும் தொண்டர்களோம். ஆயிரம் தோள்கள் உடையவன் ஆதலால் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்த பாணாசுரன் தன் வலிமையால் ஆணவம் உற்று இருந்தான். தன்னுடன் மாயப்போர் செய்த பாணாசுரனின் ஆணவம் அழியும் வகையில், சுதர்சன சக்கரத்தை ஏவி அவனது வலிமையைப் பறித்த கிருஷ்ணனுக்குப் பல்லாண்டு பாடுவோம்.

(சொற்பொருள்)

ஆழி - வட்டம்; சக்கரம்

பொறி - குறியிடும் சாதனம்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.