பார்த்தன்பள்ளி பாடுவாளே

கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும்* காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்*
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.

(பெரிய திருமொழி - 4.8.1)

கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும்* காமருசீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
(பெரிய திருமொழி - 4.8.1)

kavala yaanai kombu osiththa kannan enrum* kaamaruseer
kuvalai megam anna meni konda kOn en aanai endrum
thavala maada needu naangai thaamaraiyaal kelvan endrum*
pavala vaayal en madandhai paarththan palli paaduvaale.
(Periya Thirumaozhi - 4.8.1)

'Rutted elephant's tusk remover - Kanna, most adorable Lord !', 'O ! Lotus hued Lord!', ' O ! Hue of dark cloud !', 'My King !', 'My elephant-like majestic Master !' 'In the town of Nangai, famous for white colored skyscrapper mansions, my Lord of Lotus Dame !' -- So sings my tender daughter, through her lips of coral hue, on the Lord of Paarththan-Palli. (Rutted elephant refers to the elephant, Kuvalayapeedam, sent by Kamsa to kill Krishna.)

Thirumangai Azhwar imagines himself as both the mother and the devotional daughter in this pasuram.

[பொருள்]

'(குவலயாபீடம் என்னும்) மத யானையின் தந்தங்களை முறித்த கண்ணன்', 'காண்போரைக் கவரும் அழகும் குணமும் உடைய சீராளன்', 'குவளை மலர் போன்றும், மேகம் போன்றும் வண்ணம் கொண்ட என் மன்னன்',  'யானை போன்றவன்', 'வெண்மையான உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அவன் தாமரையாள் கணவன்'  என்றவாறெல்லாம், பவழம் போல் சிவந்த வாயை உடைய என்னுடையப் பெண், பார்த்தன்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடுவாள் !

(சொற்பொருள்)

கவளம் - யானை மதம்
ஒசித்தல் - ஒடித்தல், முறித்தல்
காமரு சீர் - விரும்பத்தக்க புகழ் (நற்குணங்கள், செயல்கள், திவ்யமான அழகு முதலியவற்றால் ஏற்படுவது)
அன்ன - அத்தன்மையான (உவம உருபு)
தாமரையாள் - மகாலக்ஷ்மி
கேள்வன் - கணவன், அன்பன், தலைவன்
தவளம் - வெண்மை
மடந்தை - பெண்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.