திருநீர் மலைவாழ் எந்தை

கலைவாழ் பிணையோ டணையும்* திருநீர்-
மலைவா ழெந்தை மருவு மூர்போல்*
இலைதாழ் தெங்கின் மேல்நின்று* இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூடலூரே.

(பெரிய திருமொழி - 5.2.8)

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்
மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்க்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே.

(பெரிய திருமொழி - 5.2.8)

kalaivaazh piNaiyOdu aNaiyum thiruneer
malaivaazh endhai maruvum oorpOl
ilai thaazh thengin mEl ninRu iLneer
kulai thaazh kidangin koodalUre.

The Lord who resides in Thiruneermalai, where deer-pairs rest together, has come to reside in Kudalur where coconut bunches hang low on trees, over leaves of the betel creeper that surrounds it.

[பொருள்]

திருக்கூடலூரில், தென்னை மரங்கள் வெற்றிலைக் கிடங்கின் கரையிலே நிற்க, அவற்றின் படர்ந்த இலைகளும், தென்னங்குலைகளும் தாழ அமைந்து, வெற்றிலைக் கிடங்கை அணைத்தவாறு காட்சியளிக்கிறது. எனது தலைவனும், சுவாமியுமான திருமால், ஆண் மான்கள் பெண் மான்களோடு சேர்ந்து வாழும் திவ்யதேசமான திருநீர்மலையை தன் இருப்பிடமாகக் கொண்டு அருள் புரிவது போலவே,  இயற்கை அழகு மிகுந்த திருக்கூடலூர் திவ்யதேசத்திலும் எழுந்தருளியுள்ளான்.

(சொற்பொருள்)

கலை - ஆண் மான்
பிணை - பெண் மான்
எந்தை - என் தந்தை; எனது தலைவன்
மருவுதல் - மகிழ்வுடன் பொருந்தியிருத்தல்; தோன்றுதல்
தெங்கு - தென்னை மரம்
கிடங்கு - வெற்றிலைப் பந்தல்; பந்தல் கால்

 

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.