அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 951
பெரிய திருமொழி : 1

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி

வேல்கணார் கலவியே கருதி

நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்

என் செய்கேன் ! நெடு விசும்பு அணவும்

பன்றியாய் அன்று பாரகம் கீண்ட

பாழியான், ஆழியான் அருளே

நன்று நான் உய்ய, நான் கண்டு konDEn

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.4)

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்

எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள்,

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி

அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்;

வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி,

நம்பிகாள் ! உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.6)

இல் பிறப்பு அறியீர், இவர் அவர் என்னீர்,

இன்னது ஓர் தன்மை என்று உணரீர்,

கற்பகம் ! புலவர் களைகண் ! என்று உலகில்

கண்டவா தொண்டரைப் பாடும்

சொல் பொருள் ஆளீர் ! சொல்லுகேன் வம்மின்;

சூழ் புனல் குடந்தையே தொழுமின்;

நல் பொருள் காண்மின்; பாடி நீர் உய்மின்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.7)

கற்றிலேன் கலைகள்; ஐம்புலன் கருதும்

கருத்துளே திருத்தினேன் மனத்தை;

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை;

பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்,

செற்றமே வேண்டி திரி தருவேன்; தவிர்ந்தேன்;

செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி

நல் துணையாகப் பற்றினேன் அடியேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.8)

*குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார்

படு துயர் ஆயின எல்லாம்

நிலம் தரம் செய்யும்; neeL விசும்பு அருளும்;

அருளொடு பெரு நிலம் அளிக்கும்;

வலம் தரும்; மற்றும் தந்திடும் ; பெற்ற தாயினும்

ஆயின செய்யும்;

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.9)

*மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்

மங்கையர் வாள் கலிகன்றி

செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை

இவை கொண்டு சிக்கென, தொண்டீர் !

துஞ்சும் போது அழைமின்; துயர் வரில் நினைமின்;

துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்,

நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.10)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 958
பெரிய திருமொழி : 2

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட

வரி சிலை வளைவித்து அன்று

ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற

இருந்த நல் இமயத்துள்

ஆலி மா முகில் அதிர் தர, அரு வரை

அகடு உற, முகடு ஏறி

பீலி மா மயில் நடம் செய்யும் தடஞ்சுனைப்

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருப்பிரிதி

பாசுர எண்: 959
பெரிய திருமொழி : 2

கலங்க மாக் கடல் அரிகுலம் பணி செய்ய

அரு வரை அணைகட்டி

இலங்கை மா நகர் பொடி செய்த அடிகள் தாம்

இருந்த நல் இமயத்துள்

விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
வேழங்கள் துயர் கூர,

பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரி தரு

பிரிதி சென்று அடை நெஞ்சே !

(1.2.2)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சித்திரகூடத்து இருப்பச்
சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும்திரிந்து ஓடி
வித்தகனே ! இராமாவோ !
நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை
அறுத்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின் ஒத்த நுண் இடையாய் !

மெய் அடியேன் விண்ணப்பம் ;

பொன் ஒத்த மான் ஒன்று

புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழிநின்று

சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன்

பிரிந்ததும் ஓர் அடையாளம்.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.