அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்

மானிட சாதியை

மானிட சாதியின் பேர் இட்டால்

மறுமைக்கு இல்லை;

வான் உடை மாதவா! கோவிந்தா !

என்று அழைத்தக்கால்

நான் உடை நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று

ஓர் மல ஊத்தையை

மலம் உடை ஊத்தையின் பேர்

இட்டால் மறுமைக்கு இல்லை ;

குலம் உடைக் கோவிந்தா ! கோவிந்தா !
என்று அழைத்தக்கால்
நலம் உடை நாரணன் தம்
அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாடும் நகரும் அறிய

மானிடப் பேர் இட்டுக்

கூடி அழுங்கிக் குழியில்

வீழ்ந்து வழுக்காதே

சாடு இறப் பாய்ந்த தலைவா !

தாமோதரா ! என்று

நாடுமின் ; நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மண்ணிற் பிறந்து மண் ஆகும்

மானிடப் பேர் இட்டு அங்கு

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்

ஏழை மனிசர்காள் !

கண்ணுக்கு இனிய கருமுகில்

வண்ணன் நாமமே

நண்ணுமின் ; நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நம்பி பிம்பி என்று நாட்டு

மானிடப் பேர் இட்டால்

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு

நாளில் அழுங்கிப் போம்;

செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர்

இட்டு அழைத்தக்கால்,

நம்பிகாள் ! நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஊத்தைக் குழியில் அமுதம்

பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில்

வண்ணன் பேர் இட்டு

கோத்துக் குழைத்துக் குணாலம்

ஆடித் திரிமினோ !

நாத் தகு நாரணன் தம்

அன்னை நரகம் புகாள்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீர் அணி மால் திருநாமமே

இடத் தேற்றிய

வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன்

விரித்த சொல்

ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு

ஒன்றும் வல்லவர்

பேர் அணி வைகுந்தத்து என்றும்

பேணி இருப்பரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த எம் தாசரதி போய்

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட

எம் புருடோத்தமன் இருக்கை;

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே

கடு வினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்

சந்திரன் வெங்கதிர் அஞ்ச

மலர்ந்து எழுந்து அணவு மணிவண்ண உருவின்

மால் புருடோத்தமன் வாழ்வு ;

நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்

நாரணன் பாதத் துழாயும்

கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி

அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு

எதிர் முக அசுரர் தலைகளை இடறும்

எம் புருடோத்தமன் இருக்கை;

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்

சங்கரன் சடையினில் தங்கிக்

கதிர் முக மணிகொண்டு இழி புனற் கங்கைக்

கண்டம் என்னும் கடி நகரே.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.