அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று

மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை

ஓரடி இட்டு , இரண்டாம் அடிதன்னிலே

தாவடி இட்டானால், இன்று முற்றும் ;

தரணி அளந்தானால் , இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய்

வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண்

வேழம் துயர் கெட, விண்ணோர் பெருமானாய்,

ஆழி பணி கொண்டானால்; இன்று முற்றும்;

அதற்கு அருள் செய்தானால், இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வானத்து எழுந்த முகில் போல் எங்கும்

கானத்து மேய்ந்து களித்து விளையாடி ,

ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத்

தானத்தே வைத்தானால், இன்று முற்றும்;

தரணி இடந்தானால், இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங் கமலக் கண்ணன் தன்னை அசோதைக்கு

மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட

அங்கு அவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல்

இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு

தளர்நடை இட்டு வருவான்

பொன்ஏய்நெய்யோடு பால்அமுது உண்டுஒரு

புள்ளுவன் பொய்யே தவழும் ;

மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை

துஞ்ச வாய் வைத்த பிரானே !

அன்னே ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப்

போனேன் ; வருமளவு இப்பால்

வன்பாரச் சகடம் இறச் சாடி

வடக்கில் அகம் புக்கு இருந்து

மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை

வேற்றுருவம் செய்து வைத்த

அன்பா ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி,

குடத் தயிர் சாய்த்துப் பருகி,

பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்

பொன்றுவித்து இன்று நீ வந்தாய்;

இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ ! உன்னை

என் மகனே என்பர் நின்றார்;

அம்மா ! உன்னை அறிந்துகொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை

மையன்மை செய்து அவர் பின் போய்

கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனிநின்று

குற்றம் பல பல செய்தாய்;

பொய்யா ! உன்னைப் புறம் பல பேசுவ

புத்தகத்துக்கு உள கேட்டேன்;

ஐயா ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி

னோடு தயிரும் விழுங்கி

கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த

கலத்தொடு சாய்த்துப் பருகி

மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போலநீ

விம்மி விம்மி அழுகின்ற

அப்பா ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெல்லைக்

கற்றாநிரை மண்டித் தின்ன

விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி

வீழ எறிந்த பிரானே !

சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்

சூழ்வலை வைத்துத் திரியும்

அரம்பா ! உன்னை அறிந்து கொண்டேன், உனக்கு

அஞ்சுவன் அம்மம் தரவே

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.