அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கேசவனே ! இங்கே போதராயே

கில்லேன் என்னாது இங்கே போதராயே

நேசம் இலாதார் அகத்து இருந்து

நீ விளையாடாதே, போதராயே

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்

தொண்டரும் நின்ற இடத்தில் நின்று

தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்,

தாமோதரா ! இங்கே போதராயே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கன்னல் இலட்டுவத்தோடு சீடை

காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு

என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்;

இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்,

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்

பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்;

உன்மகன் தன்னை, அசோதை நங்காய் !

கூவிக் கொள்ளாய், இவையும் சிலவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சொல்லில் அரசிப் படுதி, நங்காய் !

சூழல் உடையன் உன்பிள்ளை தானே ;

இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்

கையில் வளையைக் கழற்றிக்கொண்டு,

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற

அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து,

நல்லன நாவற் பழங்கள் கொண்டு,

நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்

வருபுனற்காவிரித் தென்னரங்கன்

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்

பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்

கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்

கோவிந்தன்தன் அடியார்கள்ஆகி

எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்

இணையடி என்தலை மேலனவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்

சேற்றால் எறிந்து , வளை துகில் கைக்கொண்டு ,

காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு

மாற்றமும் தாரானால் , இன்று முற்றும் ;

வளைத் திறம் பேசானால் , இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குண்டலம் தாழ, குழல் தாழ, நாண் தாழ ,

எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த

வண்டு அமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு,

விண் தோய் மரத்தானால், இன்று முற்றும் ;

வேண்டவும் தாரானால் , இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி

விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து,

படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு

உடம்பை அசைத்தானால், இன்று முற்றும்;

உச்சியில் நின்றானால் , இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி

தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால்

வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,

ஆனிரை காத்தானால், இன்று முற்றும்;

அவை உய்யக் கொண்டானால், இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு,

பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,

வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு

ஆப்புண்டு இருந்தானால், இன்று முற்றும் ;

அடியுண்டு அழுதானால் , இன்று முற்றும்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்,

உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக்

கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்

துள்ளச் சுவைத்தானால் , இன்று முற்றும்

துவக்கு அற உண்டானால், இன்று முற்றும்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.