அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்

ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை ;

பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்

தோண்டல் உடைய மலை ; தொல்லை மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்

இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை ;

கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்

இனம் குழு ஆடும் மலை ; எழில் மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய

வரி சிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த

அரையன் அமரும் மலை ; அமரரொடு கோனும் சென்று

திரிசுடர் சூழும் மலை ; திரு மாலிருஞ் சோலையதே

.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கோட்டுமண் கொண்டு இடந்து குடங் கையில் மண் கொண்டு அளந்து

மீட்டும் அஃது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை ;

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று

ஒட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆயிரம் தோள் பரப்பி, முடி ஆயிரம் மின் இலக,

ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை ;

ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்

ஆயிரம் பூம்பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாலிருஞ் சோலை என்னும் மலையை உடைய மலையை

நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக் கடல் அமுதை

மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்

மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நா அகாரியம் சொல் இலாதவர்

நாள்தொறும் விருந்து ஓம்புவார்

தேவ காரியம் செய்து வேதம்

பயின்று வாழ் திருக்கோட்டியூர்

மூவர் காரியமும் திருத்தும்

முதல்வனைச் சிந்தியாத அப்

பாவகாரிகளைப் படைத்தவன்

எங்ஙனம் படைத்தான் கொலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்

குருக்களுக்கு அனுகூலராய்ச்

செற்றம் ஒன்றும் இலாத வண்கையி

னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்

துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி

வண்ணன் தன்னைத் தொழாதவர்

பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு

நோய்செய்வான் பிறந்தார்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண்ண நல் மணியும் மரகதமும்

அழுத்தி நிழல் எழும்

திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு

மாலவன் திருநாமங்கள்

எண்ணக் கண்ட விரல்களால் இறைப்

பொழுதும் எண்ணகிலாது போய்

உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்

கவளம் உந்துகின்றார்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உரக மெல் அணையான் கையில் உறை

சங்கம் போல் மட அன்னங்கள்

நிரைகணம் பரந்து ஏறும் செங்

கமல வயல் திருக்கோட்டியூர்

நரகநாசனை நாவிற் கொண்டு அழை -

யாத மானிட சாதியர்
பருக நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.