அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த்

திருச்சக்கரம் ஏந்து கையன்

உள்ள இடம் வினவில், உமக்கு

இறை வம்மின், சுவடு உரைக்கேன்;

வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித்

தேர்மிசை முன்புநின்று

கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம்

கைசெய்யக் கண்டார் உளர்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற

அரசர்கள்தம் முகப்பே

நாழிகை போகப் படை பொருதவன்

தேவகி தன் சிறுவன்

ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச்

சயத்திரதன் தலையைப்

பாழில் உருளப் படை பொருதவன்

பக்கமே கண்டார் உளர்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மண்ணும் மலையும் மறிகடல்களும்

மற்றும் யாவும் எல்லாம்

திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச்

சிக்கென நாடுதிரேல்,

எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி

இரு நிலம் புக்கு இடந்து

வண்ணக் கருங்குழல் மாதரோடு

மணந்தானைக் கண்டார் உளர்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கரிய முகில் புரை மேனி மாயனைக்

கண்ட சுவடு உரைத்துப்

புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி

விளை கழனிப் புதுவைத்

திருவிற் பொலி மறைவாணன் பட்டர்பிரான்

சொன்ன மாலை பத்தும்

பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார்

பரமன் அடிசேர்வர்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக்

குலம் பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன் மலை ;

சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர்ச்

சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை

பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை ;

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத்

தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வம் பொன்மலை ;

எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை

அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்

கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை ;

வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி

தேன் ஆறு பாயும்தென் திருமாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில், கஞ்சன்தன்

ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை ;

கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்

சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை ;

ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்

சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.