அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின் ஒத்த நுண் இடையாய் !

மெய் அடியேன் விண்ணப்பம் ;

பொன் ஒத்த மான் ஒன்று

புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழிநின்று

சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன்

பிரிந்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைத் தகு மா மலர்க்குழலாய் !

வைதேவீ ! விண்ணப்பம் ;

ஒத்த புகழ் வானரக்கோன்

உடன் இருந்து நினைத் தேட

அத்தகு சீர் அயோத்தியர்கோன்

அடையாளம் இவைமொழிந்தான்

இத் தகையால் அடையாளம்;

ஈது அவன் கைம் மோதிரமே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திக்கு நிறை புகழாளன்

தீ வேள்விச் சென்ற நாள்

மிக்க பெரும் சபை நடுவே

வில் இறுத்தான் மோதிரம் கண்டு

ஒக்குமால் அடையாளம்,

அனுமான் ! என்று உச்சிமேல்

வைத்துக்கொண்டு உகந்தனளால்

மலர்க்குழலாள் சீதையுமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார் ஆரும் முலை மடவாள்

வைதேவி தனைக் கண்டு

சீர் ஆரும் திறல் அனுமன்

தெரிந்து உரைத்த அடையாளம்

பார் ஆரும் புகழ்ப் புதுவைப்

பட்டர்பிரான் பாடல் வல்லார்

ஏர் ஆரும் வைகுந்தத்து

இமையவரோடு இருப்பாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கதிர் ஆயிரம் இரவி கலந்து

எறித்தால் ஒத்த நீள்முடியன்

எதிர் இல் பெருமை இராமனை

இருக்கும் இடம் நாடுதிரேல்,

அதிரும் கழற்பொருதோள்

இரணியன் ஆகம் பிளந்து அரியாய்

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை

உள்ளவா கண்டார் உளர்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச்

சார்ங்கம் திருச்சக்கரம்

ஏந்து பெருமை இராமனை

இருக்கும் இடம் நாடுதிரேல்,

காந்தள் முகிழ் விரற் சீதைக்கு

ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க

வேந்தர்தலைவன் சனகராசன்தன்

வேள்வியிற்கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொலையானைக் கொம்பு பறித்து கூடலர்

சேனை பொருது அழியச்

சிலையால் மராமரம் எய்த தேவனைச்

சிக்கென நாடுதிரேல்

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று

தடவரை கொண்டு அடைப்ப

அலை ஆர்க்கடற்கரை வீற்றிருந்தானை

அங்குத்தைக் கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தோயம் பரந்த நடுவு சூழலிற்

தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில்

வம்மின், சுவடு உரைக்கேன்;

ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி

அடல் விடை ஏழினையும்

வீயப் பொருது வியர்த்து நின்றானை

மெய்ம்மையே கண்டார் உளர்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும்

நான்முகனும் முறையால்

சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற

திருமாலை நாடுதிரேல்,

வார் ஏறு கொங்கை உருப்பிணியை

வலியப் பிடித்துக் கொண்டு

தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச்

சிக்கெனக் கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப்

புணர்முலை வாய்மடுக்க

வல்லானை மா மணிவண்ணனை

மருவும் இடம் நாடுதிரேல்,

பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு

பௌவம் ஏறி துவரை

எல்லாரும் சூழச் சிங்காசனத்தே

இருந்தானைக் கண்டார் உளர்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.