அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் ;

மாணிக் குறளனே ! தாலேலோ ! வையம் அளந்தானே! தாலேலோ

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உடையார் கனமணியோடு ஓண் மாதுளம்பூ

இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடு

விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்;

உடையாய் ! அழேல் அழேல் தாலேலோ ! உலகம் அளந்தானே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

என்தம்பிரானார் எழிற்திருமார்வர்க்கு

சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு,

இந்திரன்தானும் எழில் உடைக் கிண்கிணி

தந்து உவனாய் நின்றான். தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் ,

செங்கண் கருமுகிலே ! தாலேலோ ! தேவகி சிங்கமே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு

வழு இல் கொடையான் வயிச்சிரவணன்

தொழுது உவனாய் நின்றான் ; தாலேலோ ! தூமணி வண்ணனே தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்

சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்

மா தக்க என்று வருணன் விடுதந்தான்,

சோதிச் சுடர் முடியாய் ; தாலேலோ ! சுந்தரத் தோளனே ! தாலேலோ!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்,

நச்சுமுலை உண்டாய் தாலேலோ ! நாராயணா ! அழேல் , தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் ,

ஐயா ! அழேல் அழேல் , தாலேலோ ! அரங்கத்து அணையானே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட

அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கான்ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்

வான்ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்

தேன்ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள் ,

கோனே ! அழேல் , அழேல் தாலேலோ ! குடந்தைக் கிடந்தானே ! தாலேலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.