அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின் அனைய நுண் இடையார்

விரி குழல்மேல் நுழைந்த வண்டு

இன் இசைக்கும் வில்லிபுத்தூர்

இனிது அமர்ந்தாய் ! உன்னைக் கண்டார்

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறு உடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த

இருடிகேசா ! முலை உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இரு மலை போல் எதிர்த்த மல்லர்

இருவர் அங்கம் எரிசெய்தாய் ! உன்

திரு மலிந்து திகழு மார்வு

தேக்க வந்து என் அல்குல் ஏறி

ஒரு முலையை வாய்மடுத்து

ஒரு முலையை நெருடிக் கொண்டு

இரு முலையும் முறை முறையாய்

ஏங்கி ஏங்கி இருந்து உணாயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அங் கமலப் போதகத்தில்

அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்

செங் கமல முகம் வியர்ப்ப,

தீமைசெய்து இம் முற்றத்தூடே

அங்கம் எல்லாம் புழுதியாக

அளையை வேண்டா ; அம்ம ! விம்ம

அங்கு அமரர்க்கு அமுது அளித்த

அமரர் கோவே ! முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஓட ஓடக் கிண்கிணிகள்

ஒலிக்கும் ஓசைப் பாணியாலே

பாடிப் பாடி வருகின்றாயைப்

பற்பநாபன் என்று இருந்தேன் ;

ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு

அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி

ஓடி ஓடிப் போய்விடாதே,

உத்தமா ! நீ முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி

மாதவா ! உண் என்ற மாற்றம்

நீர் அணிந்த குவளை வாசம்

நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்

பார் அணிந்த தொல் புகழான்

பட்டர்பிரான் பாடல் வல்லார்

சீர் அணிந்த செங்கண்மால் மேல்

சென்ற சிந்தை பெறுவர் தாமே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்,

பொரு திறல் கஞ்சன் கடியன்,

காப்பாரும் இல்லை, கடல்வண்ணா ! உன்னை;

தனியே போய் எங்கும் திரிதி ;

பேய்ப்பால் முலை உண்ட பித்தனே ! கேசவ-

நம்பீ ! உன்னைக் காது குத்த

ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் ;

அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி

மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப ,

நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத

நாராயணா ! இங்கே வாராய் ;

எண்ணற்கு அரிய பிரானே ! திரியை

எரியாமே காதுக்கு இடுவன் ;

கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனகக் கடிப்பும் இவையா !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்

மகரக்குழை கொண்டுவைத்தேன் ;

வெய்யவே காதில் திரியை இடுவன், நீ

வேண்டியதெல்லாம் தருவன் ;

உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய

ஒண்சுடர் ஆயர்கொழுந்தே !

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து ,

மாதவனே ! இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு

வார்காது தாழப் பெருக்கிக்

குண நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்

கோவிந்தா ! நீ சொல்லுக் கொள்ளாய் ;

இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்

இனிய பலாப்பழம் தந்து

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்

சோத்தம், பிரான் ! இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சோத்தம் , பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய் ;

சுரிகுழலாரொடு நீ போய்க்

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் ,

குணங்கொண்டு இடுவனோ? நம்பீ !

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் ,

பிரானே ! திரியிட ஒட்டில் ;

வேய்த் தடந்தோளார் விரும்பு கருங்குழல்

விட்டுவே ! நீ இங்கே வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.