அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்

கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி

வாய்த்த மறையோர் வணங்க இமையவர்

ஏத்த வந்து, என்னைப் புறம்புல்குவான்,

எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கற்பகக் காவு கருதிய காதலிக்கு

இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்

நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்

உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்

உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய

வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து

ஈத்த தமிழ்இவை ஈரைந்தும் வல்லவர்

வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி

பொய்ச் சூதிற் தோற்ற பொறைஉடை மன்னர்க்காய்,

பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த

அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய, பார்த்தன்

சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்

அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்

பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய, பார்த்தன்

சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்

அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்

தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி

வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இருட்டில் பிறந்து போய் , ஏழை வல் ஆயர்

மருட்டைத் தவிர்ப்பித்து, வன் கஞ்சன் மாளப்

புரட்டி, அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட

அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சேப்பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு

ஆப்பூண்டு, நந்தன் மனைவி கடை தாம்பால்

சோப்பூண்டு; துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று

ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் ;

அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்

சொப்படத் தோன்றி, தொறுப்பாடியோம் வைத்த

துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய

அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் ;
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.