அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்
வைத்துப்போய் வானோர் வாழச்
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து
உலகாண்ட திருமால் கோயில் ;
திருவடிதன் திருஉருவும் திருமங்கை
மலர்க்கண்ணும் காட்டி நின்ற
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஓ !
சலிக்கும் ஒளி அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள்
ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என் அடியார் அதுசெய்யார் செய்தாரேல்
நன்று செய்தார் என்பர் போலும்;
மன் உடைய விபீடணற்கா மதிள் இலங்கைத்
திசை நோக்கி மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்
மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே?
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கருள் உடைய பொழில் மருதும் கதக் களிரும்
பிலம்பனையும் கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும்
உடைய விட்டு ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு
ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்
அமரும்ஊர் அணி அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்
பணிசெய்யத் துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்றிருந்த
மணவாளர் மன்னு கோயில் ;
புது நாள்மலர்க் கமலர் எம்பெருமான்
பொன் வயிற்றிற் பூவே போல்வான்
பொதுநாயகம் பாவித்து இறுமாந்து
பொன் சாய்க்கும் புனல் அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய்
அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த் தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று
துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்;
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன்
புகழ் குழறும் புனல் அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மைத்துனன்மார் காதலியை மயிர்
முடிப்பிடித்து அவர்களையே மன்னர் ஆக்கி
உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட
உயிராளன் உறையும் கோயில் ;
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத்
திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
குறள் பிரமசாரியாய் மாவலியைக்
குறும்பு அதக்கி அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை
கொடுத்து உகந்த எம்மான் கோயில் ;
எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு
எழுந்தாற்போல் அரவு அணையின் வாய்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்
விட்டு எறிக்கும் திருவரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
உரம் பற்றி இரணியனை உகிர்நுதியால்
ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க
வாய் அலறத் தெழித்தான் கோயில்;
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த
சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்
தலை வணக்கும் தண் அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
தேவு உடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூஉருவில் இராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில் ;
சேவலொடு பெடை அன்னம் செங்கமல
மலர் ஏறி ஊசல் ஆடிப்
பூஅணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி
விளையாடும் புனல் அரங்கமே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன்
செருச்செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத
படையாளன் விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் எனையாளன்
ஏழு உலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்ற திருவரங்கமே
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.