அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில், கஞ்சன்தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை ;
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை ;
ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல்
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை ;
கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற்கோன்
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங்கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை ;
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவர்த்தனம் செய் அப்பன் மலை;
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான்
சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ் சோலையே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
எட்டுத் திசையும் எண்இறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை;
பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக்
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பரே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன்மலை ;
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை;
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்
செஞ்சுடர் நா வளைக்கும் திரு மாலிருஞ் சோலையதே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை ;
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன் அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே.
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.