அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கொண்டல்வண்ணா ! இங்கே போதராயே
கோயிற் பிள்ளாய்! இங்கே போதராயே.
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
திருநாரணா ! இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி
ஓடி அகம் புக, ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான் கற்ற கல்வி தானே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
பல்வளையாள் என்மகள் இருப்ப,
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்;
ஆலைக் கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய் ! உன்மகனைக் கூவாய் .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
போதர் கண்டாய் ! இங்கே போதர் கண்டாய் ;
போதரேன் என்னாதே போதர் கண்டாய்.
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்;
கோதுகலம் உடைக் குட்டனேயோ !
குன்று எடுத்தாய் ! குடம் ஆடு கூத்தா!
வேதப் பொருளே ! என் வேங்கடவா!
வித்தகனே ! இங்கே போதராயே .
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
செந்நெல் அரிசி சிறுபருப்புச்
செய்த அக்காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன் ;
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லிகூவிக் கொள்ளாய், இவையும் சிலவே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
செந்நெல் அரிசி சிறுபருப்புச்
செய்த அக்காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன் ;
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லிகூவிக் கொள்ளாய், இவையும் சிலவே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கேசவனே ! இங்கே போதராயே
கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இலாதார் அகத்து இருந்து
நீ விளையாடாதே, போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்
தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்,
தாமோதரா ! இங்கே போதராயே
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
கன்னல் இலட்டுவத்தோடு சீடை
காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்;
இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்,
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்;
உன்மகன் தன்னை, அசோதை நங்காய் !
கூவிக் கொள்ளாய், இவையும் சிலவே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
சொல்லில் அரசிப் படுதி, நங்காய் !
சூழல் உடையன் உன்பிள்ளை தானே ;
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக்கொண்டு,
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து,
நல்லன நாவற் பழங்கள் கொண்டு,
நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே !
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்
வருபுனற்காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்
பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்
கோவிந்தன்தன் அடியார்கள்ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்
இணையடி என்தலை மேலனவே.
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
பெரியாழ்வார் திருமொழி
ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்
சேற்றால் எறிந்து , வளை துகில் கைக்கொண்டு ,
காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் , இன்று முற்றும் ;
வளைத் திறம் பேசானால் , இன்று முற்றும்.
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.