அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

எருதுகளோடு பொருதி ,
ஏதும் உலோபாய் காண் , நம்பீ !
கருதிய தீமைகள் செய்து
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் ;
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே !
புன்னைப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே !
மடம் கொள் மதிமுகத்தாரை
மால் செய்ய வல்ல என் மைந்தா !
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
இரு பிளவு ஆக முன் கீண்டாய் !
குடந்தைக் கிடந்த எம் கோவே !
குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.

கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து,

கட்டி நன்கு உடுத்த பீதக ஆடைஅருங்கல உருவில் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது,மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்;
மலர்கள் வீழும்; வளர் கொம்புகள் தாழும்;இரங்கும்; கூம்பும்; திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீமாலிகள் அவனோடு

தோழமை கொள்ளவும் வல்லாய் !

சாமாறு அவனை நீ எண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்;
ஆமாறு அறியும் பிரானே !
அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் !
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


அண்டத்து அமரர்கள் சூழ

அத்தாணியுள் அங்கு இருந்தாய்!

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!

தூமலராள் மணவாளா !

உண்டிட்டு உலகினை ஏழும்

ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய் !

கண்டு நான் உன்னை உகக்கக்

கருமுகைப் பூச் சூட்ட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செண்பக மல்லிகையோடு

செங்கழுநீர் இருவாட்சி

எண் பகர் பூவும் கொணர்ந்தேன்,

இன்று இவை சூட்ட வா என்று

மண் பகர் கொண்டானை ஆய்ச்சி

மகிழ்ந்து உரை செய்த இம் மாலை

பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்

பட்டர்பிரான் சொன்ன பத்தே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இந்திரனோடு பிரமன்

ஈசன் இமையவர் எல்லாம்

மந்திர மா மலர் கொண்டு

மறைந்து உவராய் வந்து நின்றார் ;

சந்திரன் மாளிகை சேரும்

சதுரர்கள் வெள்ளறை நின்றாய் !

அந்தியம் போது இது ஆகும்

அழகனே ! காப்பிட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இந்திரனோடு பிரமன்

ஈசன் இமையவர் எல்லாம்

மந்திர மா மலர் கொண்டு

மறைந்து உவராய் வந்து நின்றார் ;

சந்திரன் மாளிகை சேரும்

சதுரர்கள் வெள்ளறை நின்றாய் !

அந்தியம் போது இது ஆகும்

அழகனே ! காப்பிட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கன்றுகள் இல்லம் புகுந்து

கதறுகின்ற பசு எல்லாம் ;

நின்றொழிந்தேன் உன்னைக் கூவி

நேசமேல் ஒன்றும் இலாதாய் !

மன்றில் நில்லேல், அந்திப் போது ;

மதிள் திருவெள்ளறை நின்றாய் !

நன்று கண்டாய் எந்தன் சொல்லு;

நான் உன்னைக் காப்பிட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செப்பு ஓது மென்முலையார்கள்

சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு

அப்போது நான் உரப்பப் போய்

அடிசிலும் உண்டிலை, ஆள்வாய் !

முப் போதும் வானவர் ஏத்தும்

முனிவர்கள் வெள்ளறை நின்றாய் !

இப்போது நான் ஒன்றும் செய்யேன்,

எம்பிரான் ! காப்பிட வாராய்.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.