ராகம்: செஞ்சுருட்டி
ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !
பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !
வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்
உய்யும் வழி அதுவே --- கிளியே !
எங்கள் இராமானுசனடி -- அது
யதிராஜன் திருவடியே !
ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம்.
திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே...
ஈயாடுவதோ கருடர்க்கெதிரே !
இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ !
நாயாடுவதோ நரகேசரி முன் ?
அழகூர்வசி முன் பேயாடுவதோ !
பெருமான் வகுளாபரணன் அருள்
கூர்ந்தோவாதுரை ஆயிரா மாமறையின்
ஒருசொற் பொருமோ உலகிற்கவியே !
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் !
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஏப்ரல் 2013.
(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )
Newsletter in pdf format in languages Tamizh and English.
ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !
வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)
திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை பஜித்தாராம் !
திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்
திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)
அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை
அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !
துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை
தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)
"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !
வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு
உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)
MP3 Version
चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || 8 ||
(मुकुन्दमाला - 8)
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
(முகுந்தமாலா - 8)
[பொருள்]
மனதைக் கவரும் அழகான புன்முறுவல் பூக்கும் தாமரைத் திருமுகத்தானும், நந்தகோபரின் திருமகனும், எல்லோரையும் விட உயர்ந்தவனும், நாரதர் முதலான முனிவர்களால் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே எப்பொழுதும் சிந்தித்திருக்கிறேன்.
அஹம் | நான் |
மந்த மந்த ஹசித | புன்முறுவல் பூக்கும் |
ஆநநாம்புஜம் | தாமரைத் திருமுகத்தானும் |
நந்தகோப தநயம் | நந்தகோபரின் திருமகனும் |
பராத்பரம் | மேன்மை பொருந்திய அனைவரிலும் மேம்பட்டவன் (எல்லோரையும் விட உயர்ந்தவனும்) |
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் | நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான |
ஹரிமேவ (ஹரிம் ஏவ) | ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே |
ஸந்ததம் | எப்பொழுதும் |
சிந்தயாமி | சிந்தித்திருக்கிறேன் |
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஜனவரி 2013
(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.