Blogs

Typing in Tamizh(41)

Dear Readers,

Many of us may want to share our thoughts in our mother-tongue. There are many online transliteration tools to facilitate the same.

The following post describes how we can use Google transliteration facility to type in Tamizh language.

1) Go to the link:

http://www.google.com/inputtools/cloud/try/

Click to enlarge the above image.

2) You should be seeing an editor window. The language tab shows the default language as English. Click on the tab and choose the language as Tamil.

Click to enlarge the above image

3) Start typing in the editor window. You should start seeing the transliterated text presented as various options in a small drop-down box.

Click to enlarge the above image.

4) In the images below, one can view the transliteration text output for the words Krishna, Rama and Arangaa.

Click to enlarge the above image.

Click to enlarge the above image.

Click to enlarge the above image.

5) We can now copy-paste the text to another document (or) e-mail (or) chat windows by using standard copy-paste techniques.

Mouse over the text to select the portion for copying (or) use Ctrl-a to select all the text. Issue Ctrl-c to copy and Ctrl-v to paste.

Click to enlarge the above image.

பிரபந்தம் - உரை நூல்கள்(42)

Dear Readers,
This post is an informative post. Many devotees are interested in knowing about books on Divya Prabandham and this post attempts to provide some details on that account, purely in the notion of service. Please note that STD Pathasala does not have any preference or bias towards any of the publishers or authors or books mentioned below. Also please note that STD Pathasala has its own publication, the details of which are provided below.

Tamil Original with English Meaning


Name: The Sacred Book of Four Thousand
Nalayira Divya Prabandham Rendered in English with Tamil Original
Author: Selvamudaiyanpettai Araiyar Sri Rama Bharati
Based On: Commentaries of Purvacharyas
Available at: STD Pathasala
Address:
Sri Sadagopan TiruNarayanaswami Divya Prabandha Pathasala,
Jaladampet, Chennai - 601 302
Ph: +91 44 22462436, 22460008

தமிழ் உரை நூல்கள்
ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் அருளிய உரை நூல்கள் நிறைய உள்ளன.
பெரியவாச்சான் பிள்ளை உரை நூல்கள், பகவத் விஷயம் (திருவாய்மொழி), ஆகியவற்றை அனுபவிக்க ஸமஸ்க்ருத ஞானம் நிறைய தேவைப்படுவதால் 'ஆசார்யர் வழியாகப் படிப்பது' என்ற முறை பரிந்துரைக்கப்படுகிறது. தமிழ், வடமொழி புலமை நன்கு வாய்த்தவர்கள் தாங்களாகவே உரைகளைப் புரிந்து அனுபவிக்கலாம். ஏனையோர், பெரியவர்களை அணுகி அனுபவிப்பது எளிதாம்.

பூர்வாசார்யர்கள் உரை நூல்களை அணுகுவதற்கு முன் நாமாகவே படித்து பொருள் கொள்ள கீழ்கண்ட நூல்கள் இன்றைக்கு கிடைக்கின்றன.

1) நூற்பெயர்: பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் (இரண்டு பாகங்கள்)
உரையாசிரியர்: முனைவர் த. கோவேந்தன்
பதிப்பாசிரியர்கள்: நதிக்குடி ஸ்ரீ ரங்க முத்துசீனிவாசன், காவனூர் அரு. குப்புசாமி
வெளியிடுவோர்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
முகவரி:
ப.எண், 32-B, கிருஷ்ணா தெரு
பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை - 600 017
தொலைபேசி: 044-24331510
ஈ.மெயில் முகவரி: shreeshenbaga@yahoo.com

2) Title: Sri Nalayira Divya Prabandham (4 volumes)
Commentators: Thiru Ramasubramania Sarma & TMT.R.Ponnammal
Language: Tamil
Published by: Gangai Puthaka Nilayam
Address: 13, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
Chennai - 600 017
Ph: +91 44 24342810 / 24310769

3) நூற்பெயர்: நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (நான்கு பாகங்கள்)
உரையாசிரியர்: டாக்டர் எம்.நாராயண வேலுப்பிள்ளை
பதிப்பாசிரியர்: வி.எஸ்.வி. இராகவதாசன்
பதிப்புரிமை: முல்லை நிலையம்
வெளியிடுவோர்: முல்லை நிலையம்
முகவரி:
9, பாரதி நகர், முதல் தெரு,
தி.நகர், சென்னை-600 017

4) நூலின் பெயர்: ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் என்னும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
உரையாசிரியர்: கலவை புலவர் த. திருவேங்கட இராமானுஜதாசன்
மொழி: தமிழ்
பதிப்புரிமை: உமா பதிப்பகம்
முகவரி:
171, (புதிய எண். 18) பவளக்காரத் தெரு
மண்ணடி, சென்னை - 600 001
தொலைபேசி: 2521 5363, 2525 0092

ஸ்ரீ மதே ராமானுஜாய நம:

கண்ணிநுண் சிறுத்தாம்பு(40)

தனியன் (நாதமுனிகள் அருளியவை)

அவிதித விஷயாந்தரச் சடாரே:
உபநிஷதாமுபகாந மாத்ரபோக:
அபிச குணவசாத் ததேகசேஷி
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

வேறோன்றும் நானறியேன் வேதந் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.

பாசுரங்கள்:
ராகம்: செஞ்சுருட்டி

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.(1)

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. (2)

ராகம்: நாதநாமக்ரியா

திரிதந்தாகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்;
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்காள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. (3)

நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர்; ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே. (4)

ராகம்: யமுனா கல்யாணி

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக்கூருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே. (5)

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புகழ் ஏத்த அருளினான்;
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே. (6)

ராகம்: புன்னாகவராளி
கண்டுகொண்டு என்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே. (7)

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே. (8)

ராகம் : பெஹாக்
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன் என் நம்பிக்காள்
புக்க காதல் அடிமைப் பயனன்றே (9)

பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார்பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே (10)

கண்ணன் என்னும் கருந்தெய்வம்(39)

எங்கள் பெருமான் ! இமையோர் தலைமகன் நீ !
செங்கண் நெடுமால் ! திருமார்பா ! பொங்கு
படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்*
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
(இரண்டாம் திருவந்தாதி - 97)


கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணில் புளிப்பெய்தாற் போலப்
புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே.
(நாச்சியார் திருமொழி 13.1)

நாயகி ! நாயகி ! செல்வ நாயகி !(37)

நாயகி ! நாயகி ! செல்வ நாயகி !

நாயகி ! நாயகி ! செல்வ நாயகி !

ஸ்ரீ செல்வ நாரணனின் நாயகி !

நாயகி ! செல்வ நாயகி !

நீ பிறந்தது பாற்கடலில் !

நீ உறைவது திருமால் மார்பு !

நீ ஆள்வது இந்த புவனம் - அருளும்

பொருளும் அருளும் செல்வ நாரணனின்

நாயகி ! நாயகி ! செல்வ நாயகி !

இந்திரனின் முறைக் கேட்டு

நஹுஷனை ஸம்ஹரித்த

சந்திர ஸஹோதரியே !

சொந்தமென உனை அடைந்தேன்

நாயகி ! நாயகி ! செல்வ நாயகி !

மதனனைப் பெற்றவளே !

மாதர்கள்தம் ரத்தினமே !

கஞ்சனைக் கொன்ற கண்ணனின்

கண்ணுக்கினிய ருக்மிணியே !

நாயகி ! நாயகி ! செல்வ நாயகி !

யாதவாகிரியிலே ஞானமண்டபத்திலே

யதிராஜ செல்வனின்

யதுகிரி நாயகியே !

நாயகி நாயகி செல்வ நாயகி !

செல்வமுடையான்பேட்டை திருநாரணன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் நித்ய சுமங்கலி தாயாரின் புகழ் பாடும் இந்தப் பாடல், அரையர் சுவாமி ஸ்ரீராமபாரதி அவர்களின் சிஷ்யர்களான திவ்ய பிரபந்த பாடசாலை குழுவினர் தாயாருக்கு சமர்ப்பித்தது. பங்குனி உத்திரத் திருநாளன்று அனைவரும் தாயார் அருள் பெறுவோமாக !குறிப்பு: நீர்வளம் அதிகம் உள்ள காரணத்தால் திருநாரணன் கோயில் "சாரபுவன க்ஷேத்திரம்" என்றும் வழங்கப்பெறுகிறது.

திருக்குறுங்குடி பாசுரங்கள்(38)

எங்ஙனேயோ, அன்னைமீர்காள்; என்னை முனிவது நீர்?

நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்

செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.

(திருவாய்மொழி - 5.5.2)

[English Meaning]

After seeing the beautiful Lord of Tirukkurungudi, my heart yearns for His conch and His discus, His lotus eyes, and His peerless coral lips. How now, ladies, that you blame me?

ராகம்: பைரவி

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே

தென்னஞ்சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்

மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்

மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே.

(திருவாய்மொழி - 5.5.2)

[English Meaning]

Look through my heart's eyes; do not blame me, After I saw the Lord in palmgroved Tirukkurungudi, His sacred thread, ear ornaments, mole-chest, beautiful jewels and four arms appear before me everywhere.

நாலாயிரம் - சில குறிப்புகள்(35)

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத்தில் உள்ள பல்வேறு பிரபந்தங்களின் பெயர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு. (நன்றி: திருவேங்கடத்தான் திருமன்றம் ட்ரஸ்ட்)

Sl Num வகை/காரணம் பிரபந்தம்
1 ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுத்தாம்பு
2 அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை முதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி
3 ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது நான்முகன் திருவந்தாதி
4 பாடியவர்களாற் பெயர் பெற்றவை பெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி
5 அளவால் பெயர் பெற்றவை பெரிய திருமொழி திருவெழுகூற்றிருக்கை
6 பாவாற் பெயர் பெற்றவை திருவாசிரியம் திருச்சந்த விருத்தம் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்
7 செயலாற் பெயர் பெற்றவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி
8 தன்மையால் பெயர் பெற்றவை திருவிருத்தம் சிறிய திருமடல் பெரிய திருமடல் திருமாலை
9 சிறப்பால் பெயர் பெற்றது திருவாய்மொழி

ராமானுசன் பணி மனமே !(36)

ராகம்: மலஹரி

ராமானுசன் பணி மனமே !

திருநாரணன் திருவடி தொழும் !

ராமானுசன் பணி மனமே !

சகல உயிரும் சமம் என்று சொல்லி

திருநாரணன் நாமம் கற்பித்த

ராமானுசன் பணி மனமே !


அதிசயமாய், ஆதிசேஷனாய்,

அரவணையாய் அவதரித்த

ராமானுசன் பணி மனமே !

திருநாரணன் திருவடி தொழும்

ராமானுசன் பணி மனமே !


ராமனுக்கும் இளையவனாம் !

கண்ணனுக்கு மூத்தவனாம் !

கலியுகத்தில் யதிராசனாம் !

ராமானுசன் பணி மனமே !

திருநாரணன் திருவடி தொழும்

ராமானுசன் பணி மனமே !

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள்(32)

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.

எண் ஆழ்வார் அம்சம் அவதார ஸ்தலம்
1 பொய்கை ஆழ்வார் பாஞ்சசன்னியம் (சங்கு) பொற்றாமரைக் குளம், திருவெஃகா
2 பூதத்தாழ்வார் கௌமோதகம் (கதை)

திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்)

3 பேயாழ்வார் நாந்தகம்(வாள்) ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்
4 திருமழிசை ஆழ்வார் ஆழி (சக்கரத்தாழ்வார்) திருமழிசை
5 நம்மாழ்வார் சேனை முதலியார் திருக்குருகூர்
6 மதுரகவி ஆழ்வார் நித்யஸூரி குமுதர் திருக்கோளூர்
7 பெரியாழ்வார் கருடாழ்வார் ஸ்ரீ வில்லிபுத்தூர்
8 ஆண்டாள் பூமாதேவி ஸ்ரீ வில்லிபுத்தூர்
9 குலசேகர ஆழ்வார் கௌஸ்துபம் திருவஞ்சிக்களம்
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் வைஜயந்தி (வனமாலை) திருமண்டங்குடி
11 திருப்பாணாழ்வார் ஸ்ரீவத்ஸம் உறையூர்
12 திருமங்கை ஆழ்வார் சார்ங்கம் (வில்) திருக்குறையலூர் (திருவாலி)

ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல்

azhvargal-panniruvar-signal.ogg

azhvargal-panniruvar-signal.mp3

ஆழ்வார்கள் அவதார தினங்கள்(33)

ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.

எண் ஆழ்வார் மாதம் நக்ஷத்திரம்
1 பொய்கை ஆழ்வார் ஐப்பசி திருவோணம்
2 பூதத்தாழ்வார் ஐப்பசி அவிட்டம்
3 பேயாழ்வார் ஐப்பசி சதயம்
4 திருமழிசை ஆழ்வார் தை மகம்
5 நம்மாழ்வார் வைகாசி விசாகம்
6 மதுரகவி ஆழ்வார் சித்திரை சித்திரை
7 பெரியாழ்வார் ஆனி சுவாதி
8 ஆண்டாள் ஆடி பூரம்
9 குலசேகர ஆழ்வார் மாசி புணர்பூசம்
10 தொண்டரடிப்பொடி ஆழ்வார் மார்கழி கேட்டை
11 திருப்பாணாழ்வார் கார்த்திகை ரோகிணி
12 திருமங்கை ஆழ்வார் கார்த்திகை கார்த்திகை

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.